Saturday, June 26, 2010

புராஜெக்ட் X - புத்தம் புதிய ஜேம்ஸ் பாண்ட் நாவல்

கடந்த இரண்டு மாதங்களாக மர்மமாக இருந்த புதிர் (புராஜெக்ட் எக்ஸ்) விலகியதில் இருந்து ஆர்வமும் அதனுடன் தொற்றிக்கொண்டுவிட்டது. ஆம், ஜேம்ஸ் பாண்டின் புதிய நாவல் வருகிறது என்றால் என்னை போன்ற நெடுநாள் ரசிகர்களால் காத்திருக்கவே இயலாது.

இந்த விஷயம் புதிதாக இருக்கிறதே என்று நினைப்பவர்களுக்கு, இதோ கோர்வையான சம்பவங்கள்: உலகப்புகழ் பெற்ற ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்தை உருவாக்கியவர் இயான் பிளெம்மிங். இவரது மறைவுக்கு பின் இந்த பாத்திரத்தின் நாவலாக்கம் சற்று தடை பட்டு இருந்தாலும் இப்போதும், அப்போதுமாக சில பல எழுத்தாளர்கள் எழுதிக்கொண்டு இருந்தார்கள். இயான் பிளெம்மிங் அவர்களின் பிறந்த நாளாகிய மே 28 ஆம் தேதி. அதற்க்கு சரியாக ஒரு வாரம் முன்பிருந்தே அவரின் அதிகாரபூர்வமான தலத்தில் புராஜெக்ட் எக்ஸ் பற்றிய மர்மமான விளம்பரங்கள் வர ஆரம்பித்தன.

Jeffery_Deaver

படத்தில் காணப்படும் ஜெப்ரி டீவர் என்னும் இந்த புகழ்பெற்ற எழுத்தாளர்தான் இனிமேல் இரவாப்பெயர் பெற்றுள்ள ஜேம்ஸ் பாண்ட் கதைகளை நமக்கு அளிக்கப்போகிறவர். இவர் சரியாக ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இயான் பிளெம்மிங் விருதினை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அவர் எழுதிய கார்டன் ஆப் பீஸ்ட்ஸ் ஈனும் அந்த நாவல்தான் அந்த அரிய விருதினை தட்டி சென்றது. (நாவல் என்றவுடன் ஏதோ நம்ம ஊரில் வரும் பாக்கெட் நாவல், கிரைம் நாவல் என்று எண்ணி விடாதீர்கள், இவை எல்லாம் உண்மையிலேயே மிகப்பெரிய நாவல்கள்தான் - அட் லீஸ்ட் பக்கங்களின் எண்ணிக்கையிலாவது). இல்லையென்றால் நம்ம ராஜேஷ் குமார், ராஜேந்திரகுமார் ரசிகர்கள் எல்லாம் சண்டைக்கு வேற வந்துடுவாங்க. அதனால் இப்படி ஒரு டிஸ்கிளைமர்.

சமீப வருடங்களாக ஜூனியர் ஜேம்ஸ் பாண்ட் என்றொரு நாவல் வரிசை ஆங்கிலத்தில் வந்துக்கொண்டு PROJECTXTitleஇருக்கிறது.  அந்த தொடரின் ரசிகர்கள் எல்லாம் ஒருவேளை இனிமேல் ஜூனியர் வரிசை கதைகள் வராதோ என்றெண்ணி ஐயம் கொண்டனர். ஆனால், அந்த வரிசையும் தொடர்ந்து வரும் என்று அந்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். இந்த ஜூனியர் ஜேம்ஸ் பாண்ட் கதை வரிசையானது நம்முடைய கதாநாயகன் உளவாளியாகுவதர்க்கு முன்பு நிகழ்திய சாகசங்களை பற்றி சொல்லப்படும் ஒரு கதைத் தொடராகும். நானும் ஒன்றிரண்டு கதைகளை படித்துள்ளேன். சிறப்பாக ஒன்றுமில்லை. அதே சமயம் மொக்கையாகவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

project x cover

இதோ, இதுதான் அடுத்து வரப்போகும் ஜேம்ஸ் பாண்ட் நாவலின் அட்டைப்படம். அடுத்த வருஷம் இயான் பிளெம்மிங் பிறந்த நாளில் (28th May 2011) வரப்போகும் இந்த புத்தகத்தை நீங்கள் இப்போதே இணைய தளத்தில் ஆர்டர் செய்யும் வசதியும் உள்ளது. இங்கே சென்று பாருங்கள்.

ஜெப்ரி டீவர் இப்போதே சுமார் 45 தலைப்புகளை தயார் செய்து வைத்துள்ளாராம். ஏனெனில் ஜேம்ஸ் பாண்ட் நாவல்களானாலும் சரி, திரைப்படங்களானாலும் சரி - தலைப்புகள் வித்தியாசமாகவும் ஆச்சர்யப்பட வைக்குமளவுக்கும் இருக்க வேண்டும் என்பது ஒரு எழுதப்படாத விதி. அந்த பெயரை தக்க வைத்துக்கொள்ள, ஒரு சிறப்பான பெயரை விரைவில் தேர்வு செய்து முடிவெடுப்பாராம் ஜெப்ரி.

அதே சமயம், மே மாதம் 28ஆம் தேதி சனிக்கிழமையாக இருப்பதால் அதே தேதியில் புத்தகம் வருமா அல்லது அதற்க்கு முன்பே (சந்தைப்படுத்த) வந்துவிடுமா என்றும் பலர் கேள்வி எழுப்பி உள்ளனர். அப்படி நடந்தாலும் உலகமயமாக்கம் மற்றும் சந்தை மோகம் கொண்ட இன்றைய நிலையில் அது ஒரு சாதாரண விஷயமே.

அடுத்தட பதிவில், ஜேம்ஸ் பாண்டின் வாழ்கையும், ஆரம்ப கால நாட்களும்.

22 comments:

  1. jeffrey deaver பத்தி கேள்விப்பட்டு இருக்கேன்.ஆனா Ian flemming எழுத்துக்கு அவர் ஈடு கொடுப்பாரன்னு இனி தான் பார்க்கணும்.எது எப்புடியோ,உங்க ப்ளாக்ல பாண்ட் நாவல்கள்,படங்கள்,காமிக்ஸ் பற்றிய பல பதிவுகளை எதிர்பார்கிறேன். :)

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.நானும் சில பாண்ட் நாவல்கள் படித்து இருக்கேன்(மிகச் சில). எனக்கு பாண்ட்,காமிக்ஸ்ல தான் அதிக பரிச்சயம்.ஆனா,ரெண்டு பாண்டும் ஒண்ணு கிடையாது. :)

    ReplyDelete
  3. ஜேம்ஸ் பாண்டின் புதிய நாவலுக்கு அமர்க்களமாக எதிர்பார்ப்பை கொடுத்திருக்கிறீர்கள். இயான் ப்ளமிங் ரசிகர்களை புதியவர் திருப்தி படுத்துவாரா என்று தெரியவில்லை. ஆனால் அந்த அமர கதாபாத்திரம், மீண்டும் உயிர்தெழுவது ஒரு நல்ல விடயம் தான். புதிய தலைமுறை ரசிகர்களிடம் இந்த பாத்திரத்தை பிரபலபடுத்த அது உதவும்.

    ஜுனியர் ஜேம்ஸ் பாண்ட் கதை ஒன்றினை படித்திருக்கிறேன். ஜேம்ஸ் பாண்ட் என்ற கதாபாத்திரத்தின் சரித்திரத்தன்மையை ஒப்பிடாமல் படிக்கும்போது, இப் புது முயற்சி ஓரளவு தேறி விடும். சமீபத்தில் இந்த புத்தகங்கள் இந்தியாவிலும் வெளியாக ஆரம்பித்திருககின்றன, ஆனால் விலை அதிகம்.


    அப்புறம் ஒன்று, எனது அபிமான கதாநயகனின் பெயர் தாங்கிய ஒரு வலைப்பதிவு, மற்றும் அதே பெயர் கொண்ட புதிய பதிவரை வரவேற்கிறேன். தொடர்ந்து பதிவுகளை இட்டு எம்மை குதூகலபடுத்துங்கள், நண்பரே.

    ReplyDelete
  4. நன்றி illiminatti அவர்களே.

    நானும் இந்த எழுத்தாளரின் நாவல்களை எதுவும் படித்ததில்லை. அந்த GARDEN OF BEASTS நாவலை நேற்றுதான் கைப்பெற்றேன். விரைவில் அந்த நாவலைப்பற்றியும் பதிவிட முயல்கிறேன்.

    ReplyDelete
  5. நன்றி Rafiq Raja சார். உங்களை போன்றவர்கள் என்னுடைய தளத்திற்கு வருவது மகிழ்ச்சியே.

    நான் ஜூனியர் ஜேம்ஸ் பாண்ட் நாவலை படித்தது இல்லை. முயற்சிக்கப்போவதும் இல்லை.

    ReplyDelete
  6. நன்றி ஜாலி ஜம்பர் அவர்களே.

    உங்களின் மின் அஞ்சலும் கிடைத்தது. உங்கள் தளத்தில் லிங்க் கொடுத்ததிற்கு நன்றி. நானும் விரைவில் லிங்க் அளிக்க முயல்கிறேன்.

    ReplyDelete
  7. சீக்கிரமே பதிவ போடுங்க பாஸ்.நாவல்கள் பற்றிய பதிவுகள் மிகச் சில தான்.முக்கியமா,ஆங்கில நாவல்கள் பற்றி.எது வந்தாலும் எனக்கு சந்தோசமே. :)

    ReplyDelete
  8. நண்பரே,

    ஜெஃப்ரி டீவர் எழுதிய The Vanished Man எனும் நாவலை படித்திருக்கிறேன். தரமான மர்மக் கதை ஆசிரியர்களில் ஒருவர். ஜேம்ஸ்பாண்ட் பாத்திரம் அவர் கற்பனையில் எவ்வாறு உருமாறுகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். சிறப்பான பதிவு.

    ReplyDelete
  9. நன்றி காதலரே.

    அந்த நாவலைப்பற்றிய தகவலுக்கு நன்றி. படிக்கமுயல்கிறேன். வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  10. Illuminati,

    நாவல்கள் பற்றிய பதிவுகள் சிலவே என்பது உண்மைதான். மாற்ற முயலலாம்.

    ReplyDelete
  11. //ஜெப்ரி டீவர் //

    அவரைவிட உங்களிடம் எங்களது எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது

    ReplyDelete
  12. நண்பா.. இப்போதுதான் உங்கள் தளத்தைப் பார்த்தேன்.. மிக நல்ல தொடக்கம்.. இன்னும் நிறைய எழுதுங்கள். அப்படியே, பல காமிக்ஸ்களில் வெளிவந்த பாண்ட் கதைகள் பற்றியும் எழுதினீர்கள் என்றால், என்னைப்போன்ற காமிக்ஸ் பிரியர்கள் எழுந்து நின்று ஆடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

    பின்னிப் பட்டையைக் கிளப்புங்கள் !!!! ;-)

    ReplyDelete
  13. நன்றி சுரேஷ் சார்.

    உங்களின் எதிர்பார்ப்புக்கு என்னுடைய பதிவுகள் சமனாக இருக்குமா என்பதை நீங்களே விரைவில் கண்டுபிடித்துவிடுவீர்கள்.

    ஆதரவுக்கு நன்றி.

    ReplyDelete
  14. கருந்தேள் நண்பா,

    நன்றி. உங்களைப்போல என்னால் பிரித்து மேய முடியாது. இருந்தாலும் ஏதோ என் பங்கிற்கு முயல்கிறேன்.

    அப்புறம், காமிக்ஸ் பற்றியும் முயல்கிறேன். வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  15. வலையுலகிற்கு உங்களை வரவேற்கிறேன்.

    தொடர்ந்து பதிவிட வாழ்த்துக்கள்.

    நல்லதொரு டிசைன்.

    ReplyDelete
  16. நான் இந்த தகவல்களை கேள்விப்படவே இல்லை.

    புதிய தகவல்கள். நன்றி.

    ReplyDelete
  17. முடிந்தால் அந்த நாவல்களை பற்றியும் பதிவிடுங்கள்.

    ReplyDelete
  18. // நண்பா.. இப்போதுதான் உங்கள் தளத்தைப் பார்த்தேன்.. மிக நல்ல தொடக்கம்.. இன்னும் நிறைய எழுதுங்கள். அப்படியே, பல காமிக்ஸ்களில் வெளிவந்த பாண்ட் கதைகள் பற்றியும் எழுதினீர்கள் என்றால், என்னைப்போன்ற காமிக்ஸ் பிரியர்கள் எழுந்து நின்று ஆடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறேன். //

    நாங்களும் அதை வழி மொழிகிறோம்

    ReplyDelete
  19. நன்றி புலாசுலாகியாரே.

    தங்களின் காமிக்ஸ் சேவை தொடரட்டும். அடுத்த பதிவு எப்போது?

    ReplyDelete
  20. நன்றி சிபி அவர்களே.

    தங்களின் ஆதரவுக்கு நன்றி.

    ReplyDelete
  21. valthukkal nanbare! thangal muyarchikku enathu vazhthukkal!

    ReplyDelete